இன்று (10.09.2017) நெருப்பு டா படத்தைப் பார்த்தேன். எனக்கும் மனைவிக்கும் ரொம்பவே பிடித்தது. அனைத்திலும் சிறந்தது. Photography, direction, background music எல்லாமே super.

2002 ல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை இயக்குநராக பதவியேற்ற பிறகுதான் எனக்கு இத்துறை ஆற்றும் பணியின் சிறப்பு தெரிய வந்தது. ஒரு இரசாயன கடையில் தீ ஏற்பட்டு என் தீயணைப்பாளர் ஒருவர் இரசாயனங்கள் வெடித்து பாவமாக செத்தார். அப்பொழுது தமிழக முதல்வராக இருந்த மாண்புமிகு அம்மா அவர்களைச் சந்தித்து நான் சமர்பித்த விண்ணப்பத்தை ஏற்று அந்த அணைப்பாளரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் பண உதவியாக அளித்ததோடு அவர் ஓய்வு பெறும் தேதி வரை அவரது குடும்பத்திற்கு அவரது முழு சம்பளமும் அளிக்க உத்தரவு பிறப்பித்தார்கள் அம்மா அவர்கள்.

2004 ல் நம் மாநிலத்தை சுனாமி தாக்கியபோது தீயணைப்பாளர்கள் செய்த பணியைக் கண்டு வியந்தேன். அவர்களது பணிச்சிறப்புகளை சமுதாயம் அறிய பல நடவடிக்கைகள் மேற்கொண்டேன்.

இன்று நெருப்புடா படத்தைப் பார்த்தபோது இப்படம் தீயணைப்பினரின் பணியை புகழந்து பேசியது மனதிற்கு சந்தோஷமளித்தது. சிவாஜி குடும்பத்தின் குடும்பக் கலாச்சாரமான சமுதாயப் பொறுப்பு இதன் வாய்லாக தெளிவாக தெரிந்தது.

நெருப்பு என்ற வார்த்தையைச் சுற்றியே இப்படம் அமைக்கப்பட்டுள்ளது. நெருப்பு நாம் எதிர்பாராது திடீரென்று நம்மை தாக்குவது போல் சமுதாயத்தை அழிக்கக்கூடிய ரவுடித்தனம் ஆகிய தீ குருவையும் அவரது நண்பர்களையும் தாக்குகிறது. அதிலிருந்து அந்த தீயை அணைப்பதிலே அவர்கள் ஈடப்பட நேரிடுகிறது. தீ அணைக்கப்படுவதற்குள் அப்பாவி மக்கள் அதன் வலையில் மாட்டிக் கொண்டு செத்துவிடுவது போல குருவின் அப்பாவும், சதாவின் மனைவியும் இச்சமுதாய தீக்கு பலியாகின்றனர்.

படம் முழுக்க ஒவ்வொரு நிமிடமும் நிகழ்ந்து வரும் கதைத் திருப்பங்கள் நேயர்களை அக்கறையுடன் பார்க்க வைக்கின்றன.

விக்ரம் நடந்த விதம் super. அவரது குரல் அவருக்கு ஒரு மிகப் பெரிய plus point. திரைப்பட உலகத்தில் அவருக்கு வெற்றிகளை அளிக்கக்கூடிய ஒரு மிகப் பெரிய குணம். 

ஊரின் நடுவிலுள்ள clock tower அடிக்கடி தோன்றி காலத்தின் சக்தியை நினைவுப்படுத்துகிறது. அவரவர் தீட்டும் திட்டங்களை காலம் எவ்வாறு வளைக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது இந்த clock tower.

படத்தில் குறைப்பாடுகள் உண்டா?

கதைத் திருப்பங்கள் tension யை கொண்டுவருகின்றன, ஆனால் உடனே அவிழ்த்துவிடுகின்றன. சிக்கல்கள் சேர சேர tension அதிகமாகும் படங்கள் மக்களுக்கு அதிகமாக பிடிக்கின்றன. Alternating tensions and release of tensions is typical of a comedy, not of a serious movie. And this is not a comedy.

விக்ரம் பிரபுவின் முழு acting talent யை இப்படம் பயன்படுத்தவில்லை என்று எனக்கு தோன்றுகிறது. அவருக்கு personality அளிக்கப்படவில்லை. நல்ல குணங்களின் தொகுப்பாகவே நேயர்களின் முன் நிறுத்தப்படுகிறார்.

Vikram has a bright future. The story should suit his qualities as an actor.

மொத்தத்தில் படம் super ஆக இருக்கிறது. அனைவரும் பார்க்க வேண்டிய படம்.