என் தமிழ் சற்று வித்தியாசமாக உள்ளதா?

இரண்டு வகை வித்தியாசங்கள் தென்படும் ---
1. தெரிந்தோ தெரியாமலோ நான் செய்யும் பிழைகள்
2. சிறிதளவு பேச்சு தமிழின்  சுவை.

"ல" மேலே ஒரு புள்ளி போட்டு  "ல்" ஆக்குவதில என்ன சிரமம்? என்று கேட்கத் தோன்றும் உங்களுக்கு.
"ஒண்ணு, பேச்சு தமிழில எழுதுங்க, இல்லைன்னா முறையான செந்தமிழில எழுதுங்க" என்று சொல்ல விரும்புவீங்க. "ஏன் ஒரு கலவை?" என்பீங்க.

 என் பதில் சொல்கிறேன்.

நான் தமிழ் மொழியைத் தாய் மொழியாக கற்றுக்கொள்ளவில்லை என்று காரணத்தினாலோ என்னவோ என் எழுத்துக்கு இலேசான பேச்சு சுவை கொடுக்கும்போது அது தமிழில என் creativity யை அதிகரிக்கிறது. 

என் எழுத்துக்கு பேச்சு சுவை அளிக்கும்போது யாரோ என் மனதிற்குள் பேச ஆரம்பித்துவிடுகிறானோ? அதனால் எண்ணங்கள் பீறிட்டு வருகின்றனவோ? தெரியவில்லை.

சற்று வித்தியாசமாகத் தெரிந்தாலும், என் தமிழைப் புரிந்து கொள்வதில உங்களுக்கு சிரமம் உண்டா, என்பதை தெரிவியுங்கள்.

பேச்சு சுவை அல்லாத பிழைகள் இருந்தால் கீழே உள்ள கட்டம் மூலம் தெரிவியுங்கள். சரி செய்துவிடுகிறேன்.