டிஸெம்பர் 1953-ல் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தேன். பள்ளிப் படிப்பும், கல்லூரிப் படிப்பும் முடித்து, அம்ரித்ஸார்ஸிலுள்ள குரு நானக் தேவ் பல்கலைக்கழகத்தில் சுமார் 5 வருடங்களாக ஆங்கில இலக்கிய மற்றும் மொழியியல் விரிவுரையாளராக பணியாற்றினேன். பிறகு, 1982-வில் ஐ. பி. எஸ்ஸில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு காடர் வழங்கப்பட்டேன். இப்பொழுது, பணி ஓய்வு பெற்று, சென்னையில் நிரந்தரமாக குடியேறிவிட்டேன்.

தமிழ் எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் பெயர் பெற ஆசை. ஹலோ... ஹலோ... டோக்ரா பேசுகிறைன் என்ற புத்தகம் 24-ம் தேதி மதுரை காமராஜன் பல்கலைக்கழத்தின் கல்லூரியிலும், 25-ம் தேதி ராஜ்பாளையம் ராஜூ கல்லூரியிலும் வெளியிடப்பட்டது.

தற்போது, ரட்சகன் என்ற நாவல் எழுதி வருகிறேன். அனேகமாக, மார்ச் கடைசிக்குள் வெளியாகிவிடும்.

என்னுடன் தொடர்ப்பில் இருக்க Facebook Group ஹலோ... ஹலோ... டோக்ரா பேசுகிறேன்- ல் உறுப்பினராக சேர்லாம்.