ஒரு கடைக்கு போகிறோம் . அந்த கடையில் வண்ணவண்ண்மான, சுவை சுவையான இனிப்புகளுடன் ஒரு பாகெட் வாங்குகிறோம், சுவைக்கிறோம். எல்லாமே அருமை.

பிறகு, இன்னொரு கடை --- மூன்றாவது, நாலாவது, ஐந்தாவது --- என்று பத்து கடைகளுக்கு பயணம். விதவிதமான சுவை. எல்லாமே நாக்கை பிடுங்கிவிடும் விதம்.

நண்பர்களுடனும், அன்பர்களுடனும் பகிர்ந்துகொள்ள மனம் துடிக்கிறது. ஆனால், நமக்கு இருக்கும் படிக்கும்-பசி அவர்களுக்கு இருக்குமோ? நாம் தான் பணி ஓய்வு பெற்று சாவகாசமாக அமர்ந்திருக்கிறோமே. அவர்களுக்கு நேரம் இருக்குமோ? என்று சந்தேகங்கள் எழுகின்றன.

வாங்கிய பத்து பாகெட்டுகளையும் அவர்களுக்கு அனுப்புவதற்கு பதிலாக நமக்கு மிகவும் பிடித்த பகுதிகளை மட்டுமே அனுப்பி வைத்து, கூடவே கடைகளின் முகவரிகளையும் எழுதியனுப்புக்கிறோம். "முழு பாகெட் வேண்டுமென்றால் கடைக்கு போய் வாங்கிக்கோ!" என்பது போல். 

இப்படி செய்தால்  கடைக்காரர்கள் "எங்கள் பொருளை விளம்பரப்படுத்துக்கிறானே " என்று சந்தோஷப்படுவார்களா? அல்லது "நான் இவ்வளவு அழ்கா செஞ்சதை நாசம் பண்ணிட்டனே!" என்று வருத்தப்படுவார்க்ளா?

சில நாட்களில் தெரிந்துவிடும். அதுவரை பொறுத்துப் பார்ப்போம்/