நான் முறையான மனவியல் பயிற்சி பெற்றவரல்ல. இருப்பினும், மூன்று விதமான கல்வி வழியாக மனித-மனதைப் பற்றி பல விஷயங்க்ளைக் கற்றுக் கொண்டேன் --- ஒன்று, புத்தகங்களைப் படிப்பதன் மூலம், இரண்டு, என் காவல்துறை அனுபவங்கள் மூலம், மூன்று, தியானமுறைகள் மூலம்.

யோக மனவியல் என்பது என்ன?

'யோக' என்பது இணைப்பு. நம்மை வாழ்க்கயுடன் இணைக்கும் சித்தாந்தங்களை ஆராய்ந்து அவற்றை வலிமைப்படுத்தி வாழ்க்கையை முழுமையாக வாழ்வது யோக மனவியலின் முதன்மை நோக்கம்.

முழுமையான வாழ்க்கை என்ன என்பது குறித்து கருத்து வித்தியாசம் இருக்கலாம். மதுவை அருந்தி சாக்கடையில் விழுந்து ஒரு பன்றியை கட்டிப் பிடித்து தூங்கிக் கொண்டிருப்பவனுக்கு அதுவே முழுமையான வாழ்க்கை. தன் உடல் நலத்தையே புறக்கணித்து கட்டு-கட்டாக பணத்தை சம்பாதித்திருப்பவனுக்கு அது வாழ்க்கையின் முழுமை. தன்னிடம் இருந்த குறைவான பணத்தையே மற்றவர்க்ளுக்காக செலவழித்து சந்தோஷமாக இருப்பவனுக்கு இதுதான் வாழ்க்கையின் முழுமை. ஆக, யோக மனவியலை வரையறுக்கும்போது நாம் முழுமையான வாழ்க்கை என்ன என்பதையும் அலச வேண்டும். Yogic Psychology is an integration of modern psychological concepts with the teachings of Srimad Bhagwad Geeta and the practices of the Yog Sutras.