முதலாவது குறள் 'அகர முதல எழுத்தெல்லாம்...' என்று எழுதப்படுவது வழக்கம். ஆனால், அப்படி செய்வது சரியில்லை என்பது என் கருத்து. என் அபிப்பிராயத்தில இந்த குறள் 'அகர முதள எழுத்தெல்லாம்...' என்றுதான் தொடங்கணும்.

'அகர முதல...' என்று சொல்லும்போது, என்னமோ உலகத்தை உருவாக்கிவிட்டபிறகு நம்மை பொருத்துவரையில கடவுளின் தேவையும் பொறுத்தமும் இல்லாம போய்விட்டது. அதே போல கடவுளுக்கும் நம் மீதும், அவர் இயற்றிய உலகத்தின் மீதும் அக்கறை தீர்ந்துவிட்டது என்று அர்த்தம் அல்லவா வரும்?

'முதள' என்ற வார்த்தை 'அடிப்படையாக இருப்பது', 'தாங்கும் தலமாக இருப்பது' என்ற அர்த்தத்தில வள்ளுவர் காலத்தில பயன்பாட்டில இருந்திருக்கணும். 'முதள' என்ற அந்த வார்த்தையின் participle form தான் 'முதற்று'. ஆக, 'முதற்றே' என்பது 'தாங்கும் தலமாக இருந்துகொண்டே'.

பொருள்?