நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் இத்தளத்திற்கு வருகிறேன். இடையில் பல நாட்களாகவே வேறு பணிகளில் பிஸி ஆகிவிட்டேன்.

ஓய்வு பெற்றபின் அடுத்தது என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. சொந்த பிஸ்னஸ் செய்பவருக்கு அப்படியொரு பிரச்சினை வருவதில்லை. அவர் 90 வயதிலும் சுறுசுறப்பாக இருந்தால் 19 வயதில் செய்து வந்த வேலையை செய்து கொண்டு இருக்கலாம்.

ஓய்வுக்கு பின் பணீி இல்லாமல் போய்விட்டதே என்று இருந்த வருத்தம் இப்பொழுது போய்விட்டது. பணி ஓய்வு வேறு விதமான சில ஈடுபாடுகளை வளர்க்க வாய்ப்பு கொடுத்துள்ளது.

படங்களை வரைவதில் பல்லாண்டுகளாக இருந்து வந்த அக்கறை இப்பொழுது தான் நிறைவேற்ற முடிகிறது. இன்று காலையில் இந்த படத்தை வரைந்தேன்.

Shubha

 வியாபார நிறுவனங்களில் பணிபுரியும் மேலாளர்களுக்கு பயிற்சியளிக்க Argod என்னும் ஒரு கம்பெனி தொடங்கியுள்ளேன். ஐ. ஏ. எஸ். பரீட்சை எழுத விரும்புபவர்களுக்காக ஒரு ஆன்லைன் பயிற்சி ஆரம்பித்துள்ளேன். தினமணி நாளிதழில் கட்டுரைகள் வர ஆரம்பித்துவிட்டன. ஒரு புத்தகம் எழுதி வருகிறேன். இசையிலும் என் ஈடுபாட்டை அதிகரித்துவிட்டேன். என்றைக்காவது ஒரு திரைப்படத்துக்காகவோ டீ வி ஸிரியலுக்காகவோ பாட ஆசை.

நான் எழுதிக் கொண்டிருக்கும் புத்தகம் அருமையாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

ஆக, டிஸெம்பர் 31, 2013 பணி ஓய்வு நாளன்று ஸ்தம்பித்துவிட்ட வாழ்வு மீண்டும் நடை போட்டுவிட்டது.

என் பல்வேறு ப்ராஜெக்ட்களில் எனக்கு உறுதுணையாக நண்பர் திரு தளபதி (இ-மெயில் mutram2010@gmail.com) என்னுடன் இணைந்துள்ளார்.